2015-11-21 15:38:00

இளையோர் வேலைவாய்ப்பின்மை ஆப்ரிக்க வளர்ச்சிக்குத் தடை


நவ.21,2015. ஆப்ரிக்கக் கண்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கும், நிலையான தொழிற்சாலை முன்னேற்றத்திற்கும் உதவும் நோக்கத்தில் பெண்களுக்கும் இளையோருக்கும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களில் வேலைவாயப்புகள் உருவாக்கப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

நவம்பர் 20, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, ஆப்ரிக்க தொழில்மயமாகும் நாளுக்கென செய்தியில் இவ்வாறு  கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், அண்மை ஆண்டுகளில் பல ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் மனித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், உறுதியான தொழிற்சாலை வளர்ச்சி இன்னும் இடம்பெறவில்லை என்றுரைத்துள்ள அவர், ஆப்ரிக்காவின் ஏழ்மையை ஒழிப்பதற்குரிய முயற்சிகளுக்கு, இளையோர் வேலைவாய்ப்பின்மையும், பாலியல் சமத்துவமின்மையும் தடைகளாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவில் தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காட்டுக்கும், 90 விழுக்காடு வேலை வாய்ப்புகளுக்கும் உதவுகின்றன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.