2016-01-25 15:56:00

இந்தியாவில், 2030க்குள் மலேரியாவை ஒழிப்பதற்குத் திட்டம்


சன.25,2016. இந்தியாவில், கொசுக்களால் பரவும் மலேரியா நோய், கடந்த 15 ஆண்டுகளில் குறைந்துள்ளது என்றும், இதனை 2030ம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழிப்பதற்குத் திட்டமிடப்பட்டு வருகின்றது என்றும் நலவாழ்வுப் பணியாளர் Bijat Koch அவர்கள் கூறினார். 

வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமைச் சேர்ந்த Koch அவர்கள், மலேரியா விழிப்புணர்வை திட்டத்தை தனது கிராமத்தில் நடத்தி வருகிறார்.

இந்தியாவின் 120 கோடி மக்களில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர், மலேரியா பாதிப்பு உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். 2015ம் ஆண்டில் உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 50 முதல் 75 விழுக்காடு வரை மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது என்று தெரிகிறது.

2015ம் ஆண்டில் மலேரியாவால் 273 பேர் இறந்தனர். இது, 2014ம் ஆண்டில் 562 ஆக இருந்தது.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.