2016-09-02 15:29:00

சிகா அச்சுறுத்தலுக்கு ஆப்ரிக்கா,ஆசியாவில், 200 கோடிப் பேர்


செப்.02,2016. ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில், 200 கோடிப் பேர், கொசுக்களால் பரவும் சிகா(Zika) கிருமிகள் பாதிப்பின் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று, அறிவியலாளர்கள் என்று எச்சரித்துள்ளனர்.

The Lancet இதழில், தொற்றுநோய்கள் பற்றி, இவ்வாறு கட்டுரை எழுதியுள்ள அறிவியலாளர்கள், இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா போன்ற சில நாடுகள், சிகா நோய்க்கிருமிகள் தொற்றால் அதிகம் அச்சுறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர்.

இந்நோய்க்கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கும், அவை பரவினால் அதற்குச் சிகிச்சை கொடுப்பதற்கும் கடினமான சூழல்களில், பெருமளவான மக்கள் வாழ்கின்றனர் என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

தற்போது 65க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளில், சிகா நோய்க்கிருமிகள் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.