2016-12-20 14:14:00

திருவருகைக்காலச் சிந்தனை - சந்திப்பு


இருவருக்கிடையே ஏற்படுகின்ற உளமார்ந்த, உண்மையான அன்பு கலந்த சந்திப்பு, மனதிற்கு சொல்லொண்ணா ஆனந்தத்தை அளிக்கின்றது.

அது, சோகத்தில் இருப்பவர்களுக்கு, உற்சாகத்தையும், கவலையில் இருப்பவர்களுக்கு, ஆறுதலையும் அளிக்கின்றது;

அது, தேவையில் இருப்பவர்களுக்கு, உறுதுணையையும், வேதனையில் இருப்பவர்களுக்கு, அரவணைப்பையும் அளிக்கின்றது;

அது, மனம் உடைந்தவர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியில் இருப்பவர்களுக்கு, பேரானந்தத்தையும் அளிக்கின்றது.

அத்தகைய ஓர் உளமார்ந்த, ஆனந்த சந்திப்புதான், அன்னைமரியாவுக்கும் எலிசபெத்துக்கும் இடையில் நடக்கின்றது.

இன்று, எண்ணற்றோர், நமது சந்திப்பிற்காக ஏங்கி நிற்கின்றனர்.

ஆம், முதியோர் இல்லத்தில், நமது அன்பிற்காக ஏங்கி நிற்கும் முதியவர்கள்,

அனாதை இல்லங்களில், நமது அரவணைப்பிற்காக ஏங்கி நிற்கும் குழந்தைகள்,

சிறைகளில், நமது ஆதரவிற்காக ஏங்கி நிற்கும் சூழ்நிலைக் கைதிகள்,

மருத்துவமனைகளில், நமது உடனிருப்புக்காக ஏங்கி நிற்கும் நோயாளிகள், இன்னும் எண்ணற்றோர். 

இவர்களை சந்திப்போமா?

இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொணர முயல்வோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.