2016-12-27 15:11:00

இந்தியாவில் வறட்சியால் வாடுவோருக்கு திருஅவை உதவி


டிச.27,2016. இந்தியாவின் 29 மாநிலங்களில் பத்து மாநிலங்கள், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, திருஅவை நிறுவனங்கள், வறட்சியால் துன்புறும் விவசாயிகளுக்கு வழங்கிவரும் உதவிகளை, தீவிரப்படுத்தியுள்ளன என்று, UCA செய்தி ஒன்று கூறுகிறது.

நாட்டில், வறட்சிநிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், ஆறுகள் வற்றியுள்ளதால், மக்கள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து குடியேறுவதாகவும், இந்திய ஆயர் பேரவை பேச்சாளர் அருள்பணி ஞானப்பிரகாஷ் தோப்னோ அவர்கள் கூறினார்.

வறட்சியும், அதிகப்படியான வெப்பமும், 33 கோடிக்கு மேற்பட்ட மக்களை பாதித்துள்ளன என்றும், விவசாயம் பொய்த்துப் போய்விட்டதால், கடந்த சனவரியிலிருந்து, நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றும், அருள்பணி தோப்னோ அவர்கள் கூறினார்.

மேலும், கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்த ஆண்டு, இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதென, அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, விழுப்புரம் அருகே, நெல் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என, இச்செவ்வாய் தினச் செய்திகள் கூறுகின்றன.  

நெல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என, அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.