2017-02-04 16:10:00

மாரனைட் திருஅவை : 2017, மறைசாட்சிகள் ஆண்டு


பிப்.04,2017. 2017ம் ஆண்டை, மறைசாட்சிய மரணம் மற்றும், மறைசாட்சிகள் ஆண்டு என, அறிவித்துள்ளது மாரனைட் கத்தோலிக்க திருஅவை.

மாரனைட் வழிபாட்டுமுறைக்கு, தன் பெயரைச் சூட்டிய, ஐந்தாம் நூற்றாண்டு துறவி புனித மாரோன் அவர்களின் விழாவான, பிப்ரவரி 9, வருகிற வியாழனன்று இந்த ஆண்டு ஆரம்பமாகி. 2018ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியன்று நிறைவடையும்.

இவ்வாண்டு பற்றிப் பேசிய, மாரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Rai அவர்கள், திருஅவை பல இடங்களில், குறிப்பாக, மத்தியக் கிழக்கில், கடும் துன்பங்களை அனுபவித்துவரும்வேளை, இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறினார்.

இந்த மறைசாட்சிகள் ஆண்டு பற்றி, செய்தியாளர்களிடம் அறிவித்த, Batroun மாரனைட் வழிபாட்டுமுறை ஆயர் Mounir Khairallah அவர்கள், 2017ம் ஆண்டு, மறைசாட்சிய மரணம் மற்றும், மறைசாட்சிகள் ஆண்டு எனச் சிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

முதல் மாரனைட் முதுபெரும் தந்தை புனித யோவான் மாரோன் அவர்களின் விழா மார்ச் 02. இவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.