2017-02-22 15:57:00

அந்நிய நாட்டு மக்களுக்கு எதிரான ஊர்வலம் ஆபத்தானது


பிப்.22,2017. தென்னாப்ரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான, பிரெட்டோரியாவில், அந்நிய நாட்டு மக்களுக்கு எதிராக, பிப்ரவரி 24, வருகிற வெள்ளியன்று நடைபெறவிருக்கும் ஊர்வலம் குறித்து, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

அந்நியர் குறித்த ஆதாரமற்ற அச்சங்களையும், வதந்திகளையும் பரப்பும் ஒரு தருணமாக இந்த ஊர்வலம் அமைந்துவிடும் என்று, தென்னாப்பிரிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஏபெல் கபூஸா (Abel Gabuza) அவர்கள், மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

அண்மையில், பிரெட்டோரியாவில் அந்நிய நாட்டவரின் உடைமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டனம் செய்துள்ள ஆயர் கபூஸா அவர்கள், எந்த ஒரு நெருக்கடியானச் சூழலிலும், மக்கள், சட்டங்களை, தங்கள் கரங்களில் எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

அந்நிய நாட்டிலிருந்து தென்னாபிரிக்காவில் குடியேறியுள்ளவர்களில் சட்டத்திற்குப் புறம்பாக செயலாற்றுவோரை, குறிப்பாக, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருப்போரை, அரசு அடையாளம் கண்டு, அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆயர் கபூஸா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.