2017-05-15 17:25:00

சொந்த அன்னையை நினைத்துப் பாரக்கத் தூண்டும் தினம்


மே,15,2017. மே மாதம் 14ம் தேதி இஞ்ஞாயிறன்று, உலக அன்னை தினம் சிறப்பிக்கப்பட்டதையொட்டி தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் அன்னையர்களுக்காக இவ்வேளையில் செபிக்கும் நாம், சிறிது நேரம் நம் சொந்த அன்னையர் குறித்து மௌனமாக தியானித்து அவர்களுக்காக செபிப்போம் எனவும் எடுத்துரைத்தார்.

குழந்தைப் பேறு குறைந்து வருவது மற்றும், அன்னையர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவருவது ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்படும் அன்னை தினத்தன்று, உலகின் பல நாடுகளில், 'குழந்தைகளில்லா தொட்டில்கள்'  என்ற பெயரில், ஊர்வலங்களை நடத்தியவர்களுக்கு, தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார், திருத்தந்தை.

அன்போடும் நன்றியுணர்வோடும் அன்னையர்களை நினைவுகூர்ந்து, அவர்களை அன்னைமரியின் பாதங்களில் ஒப்ப்டைப்போம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இச்சனிக்கிழமையன்று இயேசு சபை அருள்பணியாளர் இறையடியார் ஜான் சல்லிவான் அருளாளராக திரு அவையால் அறிவிக்கப்பட்டதையும், தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. இளையோரின் நல வாழ்வில் அதிக அக்கறைக் கொண்டு உழைத்த புதிய அருளாளர் சல்லிவான் அவர்கள், அயர்லாந்தின் ஏழைகள் மற்றும் பணக்காரர் என அனைவராலும் அன்பு கூரப்பட்டவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.