2017-07-29 14:58:00

டிசம்பர் 7, தலித் கிறிஸ்தவர்களின் தேசிய போராட்ட நாள்


ஜூலை,29,2017. தலித் கிறிஸ்தவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டுமென, குஜராத் மாநிலத்தின் பரோடா அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Stanislaus Fernandes அவர்கள் கூறினார்.

Vadodaraவின் ஜூவன் தர்ஷன் மேய்ப்புப்பணி மையத்தில், தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் Fernandes அவர்கள், மத்தியில் ஆளும் அரசு, தலித் கிறிஸ்தவர்களுக்குரிய சலுகையை வழங்குவதற்கு ஆதரவாக இல்லாவிடினும், தலித் கிறிஸ்தவர்கள் தங்களின் முயற்சிகளை விட்டுவிடக் கூடாது எனக் கூறினார்.

நாட்டில், தலித் மக்களும், சிறுபான்மை சமூகங்களும் அநீதிகளால் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமெனவும், பேராயர் Fernandes அவர்கள் கூறினார்.

ஜூலை 22, 23 தேதிகளில் நடைபெற்ற இந்த ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7ம் தேதியன்று, தலித் கிறிஸ்தவர்களின் உரிமை கோரும் போராட்ட நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவை, கத்தோலிக்க ஆயர் பேரவை, தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை ஆகியவற்றின் பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தியாவில், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதியன்று, தலித் கிறிஸ்தவர்களுக்காக, கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.