2017-10-17 16:54:00

ரொஹிங்கியா புலம்பெயர்ந்தவர்களுக்கு பங்களாதேஷ் காரித்தாஸ்


அக்.17,2017. மியான்மாரில் ரொஹிங்கியா இன மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, பங்களாதேஷ் வந்துள்ள ஏறத்தாழ எழுபதாயிரம் பேருக்கு, பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனம், நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றது.

இரண்டு மாத, ஆரம்பகால நிவாரண உதவிகளைச் செய்வதற்கு, பங்களாதேஷ் அரசு, காரித்தாஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்திருக்கின்றது என்று, அந்நிறுவனத்தின் James Gomes அவர்கள் யூக்கா செய்தியிடம் கூறினார்.

Cox’s Bazar மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ரொஹிங்கியா இன மக்களுக்கு, காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகிறது.

பங்களாதேஷ் நாட்டில், ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் அடைக்கலம் தேடியிருப்பதால், இந்நாடு கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றது என்றும் செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.