2018-02-23 14:28:00

இமயமாகும் இளமை …............: இளவயதில் சாதிக்க முடியாதா?


இந்திய வரலாற்றில் இடம் பெற்றபோது, பகத்சிங்கின் வயது 23.

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறியபோது, வயது 27.

ஜான்சி ராணி, வெள்ளையரை எதிர்த்து, வீரத்துடன் போரிட்டபோது, வயது 25 .

திருப்பூர் குமரன், வெள்ளையரை எதிர்த்து, இரத்தம் சிந்தியபோது வயது 26.

அலெக்சாண்டர், பாரசீகத்தின் மீது படையெடுத்தபோது, வயது 22.

ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்தபோது, வயது 24 .

கலிலேயோ தெர்மோமீட்டர் அடிப்படைக் கூறைக் கண்டுபிடித்தபோது, வயது 20.

மார்க்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கியபோது, வயது 17.

கிரஹாம்பெல் தொலைபேசியை கண்டறிந்தபோது, வயது 29.

பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தபோது, வயது 19. 

சாதனைகள் செய்வதற்கு வயது வரம்பு தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.