சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

இறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு

இறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லி - RV

14/04/2018 14:49

ஏப்.14,2018. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லி அவர்கள் உட்பட, எட்டு இறைஊழியர்களின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இச்சனிக்கிழமை முற்பகலில் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து, எட்டு இறைஊழியர்களின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.

இறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லி (Varghese Payyappilly) அவர்கள், கேரளாவின் Chunangamvelyல், 1927ம் ஆண்டு மார்ச் 19ம் நாள், ஆதரவற்ற அருள்சகோதரிகள் (Sisters of the Destitute) சபையை நிறுவினார். மறைமாவட்ட அருள்பணியாளரான இவர், 1876ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாளன்று, கேரளாவின் Konthuruthyல் பிறந்தார். இவர், 1929ம் ஆண்டு, அக்டோபர் 5ம் நாள், எர்ணாகுளத்தில் காலமானார்.  

மேலும், போர்த்துக்கல், இத்தாலி, கானடா, இஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 இறைஊழியர்களின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை,  ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா அன்னை ரிப்பராத்ரிச்சி சபையை ஆரம்பித்த Emanuele Nunes Formigão, இத்தாலியின் திருநற்கருணை அருள்பணியாளர் சபையைச் சேர்ந்த Ludovico Longari,  கானடாவில், ஒட்டாவா பிறரன்பு சகோதரிகள் சபையை ஆரம்பித்த Elisabetta Bruyère,  இத்தாலியில், துன்புறும் இயேசுவின் திருஇதய சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்த Margherita Ricci Curbastro, இத்தாலியில், லிபாரி  அமல அன்னையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை ஆரம்பித்த Florenza Giovanna Profilio,  இத்தாலியில் கிறிஸ்து அரசர் மறைபோதகர் சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்த Maria Dolores di Cristo Re, இஸ்பெயினின், புனித வின்சென்ட் தெ பவுல் பிறரன்பு பிள்ளைகள் அமைப்பின் தலைவர் Justa Domínguez de Vidaurreta e Idoy ஆகிய இறைஊழியர்களின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/04/2018 14:49