2018-06-12 16:03:00

ஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு


ஜூன்12,2018. ஈராக் நாட்டில் வன்முறைத் தாக்குதல்களால் இடம்பெறும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு, இந்த ஆண்டின் முதல் பாதியில் எண்பது விழுக்காடு குறைந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தோடு தொடர்புடைய பன்னாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்போடு தொடர்புடைய jihadist புரட்சிக்குழுவினரைத் தோற்கடித்ததன் பயனாக, இந்த 2018ம் ஆண்டில் வன்முறைக்குப் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது என, அந்நிறுவனங்கள் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

2017ம் ஆண்டின் முதல் பாதி பகுதியோடு இவ்வாண்டை ஒப்பிடும்போது, அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 80 விழுக்காடு குறைவு எனவும், இவ்வாண்டில் 477 பேர் வன்முறை தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

2018ம் ஆண்டில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும், 76.4 விழுக்காடு குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.