2018-06-15 15:53:00

இமயமாகும் இளமை : இந்திய சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது


பிரிட்டன் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4’ கடந்த ஆண்டு நடத்திய சிறுவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த வினா-விடை நிகழ்ச்சியில் ’சிறார் மேதை’ (‘Child Genius) என்ற பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் தோஷி(12) என்பவர் பெற்றார். 12 வயதுக்குட்பட்ட இருபது போட்டியாளர்கள் பங்கேற்ற, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் அந்நாட்டை சேர்ந்த ரோனன்(9) மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராகுல் தோஷி(12) மோதினர். இந்நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்த ராகுல் தோஷி, 10-4 என்ற புள்ளிகள் கணக்கில் தனது போட்டியாளரான ரோனனை வென்றார். இங்கிலாந்தில் 18-வது நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ராகுல் முன்வைத்த கருத்துகள், பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட அதிகமான அறிவாற்றல் நிறைந்த மாணவராகக் கருதப்படும் ராகுல், ஏற்கனவே ‘மென்ஸா கிளப்’ எனப்படும் அறிவுசார் கழகத்தில் உறுப்பினராக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சாதிக்கப் பிறந்தவர்கள் இக்கால இளையோர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.